ஹபுகஸ்தலாவை வைத்தியசாலைக்கு மேலதிக வசதிகள்

ஹபுகஸ்தலாவை வைத்தியசாலைக்கு மேலதிக வசதிகள்.

மத்திய மாகாணத்திலுள்ள சில  முக்கிய வைத்தியசாலைகளில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாகக் கலந்துரையாடி தீர்வு காண்பதற்காக  அமைச்சர் ரவுப் ஹக்கீம், பிரதி அமைச்சர் பைசர் காசிம், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் நயீமுல்லாஹ்  ஆகியோர் கலந்து கொண்ட கூட்டமொன்று  மத்திய மாகாண சுகாதார  அமைச்சின் மாகாண சுகாதாரப் பணிப்பாளர் Dr. ஷாந்தி சமரசிங்க அவர்களின் பணிமனையில் நடைபெற்றது.

ஹபுகஸ்தலாவை மத்திய மருந்தகத்தின் அபிவிருத்தி தொடர்பாக பிரதேச வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கத்தினால் கையளிக்கப்பட்ட மகஜர் இதன்போது பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
நோயாளர்களுக்கும்,மருத்துவப் பரிசோதனைகளுக்காக வருவோருக்குமான மேலதிக உட்கட்டமைப்பு வசதிகள்,  தேவைப்படும் மருத்துவ உபகரணங்கள்,  மற்றும் கட்டட வசதிகளுடன் வைத்தியசாலை அபிவிருத்தி செய்யப்பட வேண்டியதன் அவசியம் சுட்டிக் காட்டப்பட்டது.

ஹபுகஸ்தலாவை வைத்தியசாலையினை தரமுயர்த்துவதில் கூடுதல் கவனம் செலுத்தும்படி மாகாணப் பணிப்பாளரை அமைச்சர் ரவூப் ஹக்கீம் வேண்டிக்கொண்டார்.

மேற்படி கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதில் தமது தனிப்பட்ட  அவதானத்தைச் செலுத்துவதாகவும் அவசர சிகிச்சைப்  பிரிவை அமைப்பதோடு
தேவைப்படும் வைத்திய  உபகரணங்களை அவசரமாக வழங்குவதாகவும் குறிப்பிட்ட பணிப்பாளர்  அவர்கள் மேலதிக வசதிகள் தொடர்பில் நேரடியாக மதிப்பீடொன்றைச் செய்து தரும்படி
மாகாண பிரதிப் பணிப்பாளரைக் கேட்டுக் கொ‌ண்டா‌ர்.

அன்றைய தினமே  முன்னாள் மாகாண சபை உறுப்பினர்  நயீமுல்லாஹ் அவர்களுடன் வைத்தியசாலைக்கு
விஜயம் செய்த   ம மா பிரதி சுகாதாரப்  பணிப்பாளர் Dr.ஹம்தான் அவர்கள் வைத்தியசாலைக்குப் பொறுப்பான Dr.அயோமி மற்றும் ஊர்ப் பிரமுகர்களுடன் கலந்துரையாடியதோடு தேவைப்படும் கட்டட அமைப்புக்கான வசதிகள் குறித்தும் உபகரணங்கள் குறித்தும்  அறிக்கையொன்றினைத் தயாரித்துக் கொண்டதோடு தொழிநுட்ப மதிப்பீடுகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.

(1970 ல் ஆரம்பிக்கப்பட்ட ஹபுகஸ்தலாவை மத்திய மருந்தகத்தை அமைப்பதற்கான காணியை காலம் சென்ற சஹீத் ஹாஜியார் தமது சொந்த நிதியில் வாங்கி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
1995 ல் மகாண சபை அமைச்சராக  இருந்த M.H.M.ஹலீம் அவர்களின்
அழைப்பிற்கமைய அப்போதைய சுகாதார அமைச்சர் A.H.M.பௌசி அவர்களால் வைத்தியசாலை  கட்டடத்தொகுதியொன்று திறந்து வைக்கப்பட்டது. )

20 ஜூன் 2016 ல் நடைபெற்ற குறிப்பிட்ட கூட்டத்தில் ம மாகாண மேற்படி வைத்தியசாலைகளின் அபிவிருத்திக்காக 1500 மில்லியன்   ஒதுக்கீடு செய்யப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மஸிஹுதீன் அனசுல்லாஹ்

Photos: fb.com/hapugastalawa

image

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *